மீண்டும் தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

Photo of author

By Parthipan K

மீண்டும் தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

Parthipan K

Once again in Tamil Nadu, all these areas are out of power!! Know your area!!

மீண்டும் தமிழகத்தில்  இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

திடீரென்று ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.இந்த மின்தடையால் பல அலுவலக பணிகள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து கொண்டே வருகின்றது.

மேலும் சில சமயங்களில் மோசமான வானிலை ,அதிக மழை,வெள்ளம் உள்ளிட்ட சில காரணங்களாலும் மின்தடை ஏற்படுகின்றது. மேலும் மின் பராமரிப்பு பணிக்காகவும் மின்தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளின் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனையடுத்து  திருப்பூர் மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதியில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பூளவாடி ,பொம்மநாயக்கன்பட்டி ,கள்ளிப்பாளையம் ,பெரியபட்டி,கள்ளப்பளையம் ,குப்பம்பாளையம் ,அம்மாபட்டி ,தொட்டியன் துறை ,மானுர்பாளையம் ,பெரிய குமாரபாளையம் ,முண்டுவேலம்பட்டி ,வடுகபாளையம் ,பொட்டிக்காபாளையம்,ஆத்து கிணத்துப்பட்டி,சுங்கரமடங்கு ,முத்துச முத்திரம் ,கொள்ளுப்பாளையம் ,லிங்கமனாயக்கன்புதூர் ,ஆமந்தகடவு ,சிக்கனுத்து ,சுங்காரமடங்கு ,குடிமங்கலம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.