பிறப்புறுப்பு பகுதியில் இருந்து வெளியேறும் திரவத்தை தான் வெள்ளைப்போக்கு என்கின்றோம்.பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த வெள்ளைப்படுதல் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.அதிகப்படியான வெள்ளைப்படுதல்,மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல்,துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்கும் பெண்கள் அலட்சியம் கொள்லாமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
வெள்ளைப்படுதல் குணமாக இங்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் தரப்பட்டுள்ளது.இதை செய்து வெள்ளைப்படுதல் நோயை விரட்டுங்கள்.
*கானாவாழை கீரை – 10
*தண்ணீர் – ஒரு கிளாஸ்
முதலில் கானாவாழை கீரையை எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு இதை பொடியாக நறுக்கி உரலில் போட்டு மைய்ய இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடுங்கள்.இதை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
*நன்னாரி இலை – இரண்டு
*தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் இரண்டு நன்னாரி இலையை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து பருகி வந்தால் வெள்ளைப்போக்கு குறையும்.
*கீழாநெல்லி இலை – சிறிதளவு
*தண்ணீர் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.பிறகு சிறிதளவு கீழாநெல்லி இலையை பறித்து இடித்து சூடாகி கொண்டிருக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
*அம்மான் பச்சரிசி இலை – சிறிதளவு
*தண்ணீர் – சிறிதளவு
அம்மான் பச்சரிசி இலையை சேகரித்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.