ஒன் கிளிக்.. டவுன்லோட் ஹோல் எபிசோட்ஸ்!! netflix சரவெடி!!

0
8
One Click.. Download Whole Episodes!! netflix grenade!!
One Click.. Download Whole Episodes!! netflix grenade!!

Netflix சமீபத்தில் தனது தளங்களில் அதிகமாக பதிவிறக்கும் சீசன்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்தில் ஸ்கிவிட் சீசன் 1 மற்றும் 2 ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் முண்ணனி வரிசையில் மான்ஸ்டர்: தி ஜெஃப்ரி டாஹ்மர் ஸ்டோரி, ஒன் பீஸ் மற்றும் குயின் சார்லோட் : ஏ ஃபிரிட்ஜெர்டன் ஸ்டோரி ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவற்றை பதிவிறக்குவதற்கு ஐபோன் மற்றும் ஐபாட் யூசர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.

இதனை தவிர்க்கும் வகையில் நெட்ப்ளிஸ் ஓ டி டி தளம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் பிடித்த நிகழ்ச்சிகளின் சீசர்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்கு முன்னால் தனித்தனி எபிசோடுகளை டவுன்லோட் செய்யுமாறு இருந்திருந்தது. இப்பொழுது ஒரே கிளிக்கில் மொத்த எபிசோடையும் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இது பெரும்பாலும் ஐஓஎஸ் பயனர்களுக்கு பெரிதும் பயன்படும். இந்த டவுன்லோட் ஆப்சன் டிஸ்ப்ளே பக்கத்தில் ஷேர் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும். இதன் மூலம் ஆஃப்லைனிலும் பார்க்கலாம். இது பயணங்களின் போது பெரிதும் பயன்படும்.

ஆஃப்லைன் வியூவிங் சிஸ்டத்தை 2016 இல் முதல் முதலில் நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. அதன் பிறகு ஸ்மார்ட் டவுன்லோட் ஆப்ஷனை இணைத்திருந்தது. தற்சமயம் இந்த புதிய ஆப்ஷனையும் இணைத்துள்ளது. இந்த ஆப்ஷன்காக நெட் ப்ளிக்ஸ் அமெரிக்காவில் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. விளம்பரங்கள் உள்ள சந்தாவிற்கு பழைய விலையை விட கூடுதலாக 85 ரூபாய் ( அமெரிக்காவில் ஒரு டாலர்) கட்டணம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் கட்டணம் அதிகரிக்கும் என்று குறிப்பிடவில்லை. மேலும் நிறுவனம் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது. இந்தியாவில் தற்போது நான்கு வகையான சந்தாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை மொபைல்,பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் ஆகியவை.

Previous articleகவியரசர் கண்ணதாசனின் கடைசி நொடிகள்!! உண்மையை உடைத்த சரோஜாதேவி!!
Next articleதிருமணமா நோ வே சொன்ன த்ரிஷா!! டேட்டிங்கும் ஒர்க்அவுட் ஆகவில்லை!!