தேங்காய் எண்ணெய் ஒன்று போதும்.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் ஒரே வாரத்தில் குணமாகிவிடும்!!

Photo of author

By Rupa

இக்காலத்தில் மூட்டு வாலியானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல இளம் வயதினர் மற்றும் சிறு பிள்ளைகளுக்கும் ஏற்படுகிறது.இக்காலத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறை அதிகரித்து வருவதால் இடுப்பு வலி,மூட்டு வலி,கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரித்தால் மூட்டு வலி பிரச்சனை உண்டாகும்.இதனால் வயதாவதற்கு முன்பே நடப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.எனவே உடல் எலும்புகள் வலிமைபெற,உடல் ஆரோக்கியம் மேம்பட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் உண்ண வேண்டும்.

உங்களுக்கு மூட்டு வலி பாதிப்பு அதிகரித்தால் கால் வீக்கம்,நடப்பதில் சிரமம்,படி ஏறுவதில் சிரமம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல பாதிப்புகள் ஏற்படக் கூடும்.இந்த மூட்டுவலி பாதிப்பை தைலம்,மருந்து மாத்திரை போன்றவற்றின் மூலம் குணப்படுத்த முயற்சித்தும் பலன் இல்லை என்று வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.

மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.தேங்காய் எண்ணெயை தினமும் மூட்டு பகுதியில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி,வீக்கம் போன்ற பாதிப்புகள் நீங்கும்.

கால் வெடிப்பு,பாத வலி மற்றும் பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சரியாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.கடையில் விற்கும் மூட்டு வலி மருந்தை வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி மூட்டு வலியில் இருந்து மீளலாம்.மூட்டு வந்த பிறகு பயன்படுத்துவதை விட இளம் வயதில் இருந்தே மூட்டுகளில் தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து வந்தால் வயதான பிறகு மூட்டு வலி ஏற்படுவதை தடுக்கலாம்.

மேலும் தேங்காய் எண்ணெயை சூடாக்கி மூட்டு பகுதியில் தேய்த்தால் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் குறையும்.இது தவிர ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முடக்கத்தான் கீரை,பிரண்டை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி நீங்கும்.