கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

Photo of author

By Jayachithra

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை தொடங்க இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பரில் கிருஷ்ணகிரி அருகே 500 ஏக்கர் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் 2021 ஜனவரியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்று, போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மூன்று மாதங்களில் முதல்கட்ட கட்டுமானம் நிறைவுற்று மின்சார வாகன உற்பத்தி தொடங்கப்பட்டு வேகமாக நடக்கிறது.

மேலும் இந்த தொழிற்சாலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 3000 அதிநவீன ரோபோக்கள் வாகன உற்பத்தியை மேற்கொள்ள இருக்கின்றன. ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒரு வாகனம் என ஆண்டுக்கு ஒரு கோடி அதிகமான மின்சாரம் சக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

அதனை தொடர்ந்து ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வகையில் இவ்வகை இருசக்கர வாகனங்கள் தயாராக உள்ளன. 500 ஏக்கரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 100 ஏக்கர் மரம் நட திட்டமிடப்பட்டிருக்கிறது. 400 ரூபாய் முன்பணம் செலுத்தி அந்த நிறுவனம் ஓலா மின்சார இருசக்கர வாகனத்துக்காக வெளியிட்ட அறிவிப்பை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.