ஒரு நாள் முதல்வன் போல் ஒரு நாள் ஹெச் எம்!! மாணவரின் அசத்தலான முதல் கையெழுத்து!!
நவம்பர் 14ஆம் தேதி ஜவர்கலால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரு மாணவர் அல்லது மாணவியை தேர்வு செய்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பணி நியமனம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்தப் பள்ளியில் படிக்கும் தருண் என்ற மாணவன் விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் முதலாவதாகவே இருந்துள்ளார். அவருக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணியை வழங்கியுள்ளனர். மேலும் தலைமை ஆசிரியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவருடைய பணி என்ன? எப்படி பள்ளியை நடத்த வேண்டும் என அம்மாணவனுக்கு கற்பித்தனர்.
பின்பு அந்த மாணவன் இறைவழிபாட்டில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்டு மாணவர்கள் விரைவில் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுரை கூறினார். பின்பு அங்குள்ள ஆசிரியர்களுக்கு எந்தெந்த வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அவர்களின் வருகை பதிவேட்டையும் பார்வையிட்டார். குழந்தைகள் தின விழா என்பதால் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டு களித்ததோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவரது கையிலே பரிசு வழங்கப்பட்டது.
ஒரு நாள் முதல்வன் போல் ஒரு நாள் எச்சமாக இவர் செயல்பட்டது மற்ற மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தாங்களும் இதுபோல ஒரு நாள் ஹெச்எம் ஆக மாற வேண்டும், என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியராக ஒரு நாள் பணியாற்றிய தருணிடம் அவருடைய அனுபவம் பற்றி கேட்டுள்ளனர்.
தினம்தோறும் தலைமை ஆசிரியர் செய்து வரும் வேலைகள் பற்றியும் அதில் உள்ள அழுத்தம் பற்றியும் நான் தெரிந்து கொண்டேன். மாணவர்களின் நிர்வாக மேலாண்மை திறனை வளர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை அளித்த பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றி என தெரிவித்தார்.