கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் பலி !!

Photo of author

By Parthipan K

கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள மகாதானபுரத்தில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இடத்தில் நேற்று மாலை திருச்சியிலிருந்து கரூர் நோக்கி அமல்ராஜ் மற்றும் அவருடன் மூவரும் மாருதி காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது பெங்களூருவிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் கார் ஓட்டிய வந்த அமல்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .காரில் வந்த மற்றவர்கள் ஜெர்சியா (35),அவர்களது மகள் கிருஸ்டினா ஜெனிபர் (22),ஜெயஸ்ரீ (16) ஆகியோர் மூவரும் காயத்துடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.