ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு லட்சம் வீடுகள்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த காலகட்டத்தில் பல மக்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலையை புரிந்து ஒவ்வொரு மாநில அரசும் அவர்களுக்கு ஏற்றார்போல் திட்டங்களை வகுத்து வீடு வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தி வருகிறது.அந்த வகையில் கேரளாவில் லைப் மிஷின் என்ற திட்டத்தின் மூலம் வீடு அல்லாத மற்றும் நிலமற்ற மக்களுக்கு வீடுகள் கட்டி தந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 4.3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய வீடு வளாகங்கள் கட்டப்படும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஐந்து வருடத்தில் நிலமற்ற மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 131 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.ஆனால், இவர்களது இலக்கு ஐந்து வருடத்தில் 4.3 லட்சம் வீடுகள் கட்டுவது.தற்போது இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் 2021 முதல் 2026 முடிவதற்குள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளார்.மேலும் கூடுதல் வீடு கட்டுவதற்காக 100 நாள் திட்டத்தினுடன் இணைந்து லைப் மிஷின் திட்டத்தையும் சேர்த்து 2067 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.
அந்த வீடுகள் அனைத்தும் நேற்று மக்களுக்கு வழங்கப்பட்டது.இது கொரோனா கட்ட காலமென்பதால் கேரள முதல்வர் பினராய் விஜயன் காணொளி மூலம் மக்களுக்கு இலவச வீடுகளை வழங்கினார்.மக்களுக்கு வீடுகளை வழங்கிவிட்டு மேற்கொண்டு பேசுகையில், 2016 முதல் கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.தற்போது நில மற்றவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வாழ்வாதாரத்தை நடத்த மேலும் 2207 வீடுகள் கொண்ட முப்பத்தியாறு வீட்டு வளாகங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.அதுமட்டுமின்றி மேலும் 17 வீட்டு வளாகங்கள் கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றார்.அதன்படி பார்த்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு லட்சம் வீடுகள் என வரையறுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.