கோவையில் அதிகரித்த கொரோனா!! மேலும் ஒருவர் பலி!!

0
253
#image_title

கோவையில் அதிகரித்த கொரோனா!! மேலும் ஒருவர் பலி!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனோ பாதிப்பு தற்பொழுது மீண்டும் பரவி மக்களை தாக்கி வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனோ நோய் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் கோவையில் கடந்த இரண்டு வாரத்திற்கு பிறகு கொரோனா பதிப்பால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த 15 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவால்  மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நேற்று 43 பேர் குடைமடைந்து உள்ளனர். தற்பொழுது 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 2,618 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Previous articleபழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
Next articleபருவதமலை அடிவாரத்தில் வைக்க 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவான சிவ லிங்கம்!! சிலை!!