ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

0
152

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்படம் நல்ல கம்பேக் கொடுத்துள்ளது என்று படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தின் இயக்குநர் நெல்சனை பாராட்டி தள்ளி வருகின்றனர்.மேலும் தலைவனை நெல்சன் வேற மாறி செதுக்கி அழகாக திரையில் காட்டிவிட்டார் என்று புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் நாள் வசூலை முந்தி விட்டதென்று ரஜினி ரசிகர்கள் கெத்தாக கூறி வருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக ‘சூப்பர் ஸ்டார் பட்டம்’ குறித்த வார்த்தை மோதல் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே நிலவி வருவது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.இந்நிலையில் ‘ஜெயிலர்’ ரஜினிக்கு வெற்றி படமாக அமைந்து விட்டதால் அவரின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் அவரது ரசிகர்களை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக ஜெயிலர் படம் நன்றாக இல்லை,படம் சுமார் தான் என்று விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.மேலும் விஜய் ரசிகர் ஒருவர் ஜெயிலர் படம் ஒர்த் இல்லை என்று கூறியதால் ரஜினி ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தற்பொழுது ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.அது என்னவென்றால் இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் அழைத்த விஜய் கலக்கிட்டீங்க நெல்சன்,ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்று பாராட்டி இருக்கின்றார்.விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளங்கில் வார்த்தை தகராறில் ஈடுபட்டு வரும் நிலையில் விஜய் அவர்களின் இந்த வாழ்த்து செய்தி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் ஜெயிலர் பட கதையை ரஜினி அவர்களிடம் கூறுவதற்கு விஜய் தான் காரணம் என்று ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நெல்சன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்…
Next articleசிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!!