ஒருதலை காதல் விவகாரம் பிளஸ் 2 மாணவி மீது அரிவாள் வெட்டு!! இளைஞர் கைது!

0
254
#image_title

ஒருதலை காதல் விவகாரம் பிளஸ் 2 மாணவி மீது அரிவாள் வெட்டு!! இளைஞர் கைது!

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் பில்ஸ் 2 தேர்வு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.

இன்று இறுதி தேர்வு எழுதிவிட்டு வெளியே வெளியே வந்த நிலையில் அவரை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சோலையாப்பன் அந்த மானவியிடம் பேச முயன்றுள்ளார்.

அப்போது அந்த மாணவி அவரிடம் பேச்சு கொடுக்காமல் விலகி சென்றதால் அத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கீலே விழுந்தார். பின்னர் வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை பிடித்து தட்டப்பாரை போலீஸிடம் ஒப்படைத்தனர்.

படுகாயம் அடைந்த மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous articleசேலம் மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் பற்றாக்குறை!! பெண்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்!!
Next articleஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!!