ஒருவழியாக பிக் பாஸ் சீசன் 4 இன் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!

0
155

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுக் வருகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வருட பிக் பாஸ் சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 எப்பொழுது தொடங்கும் என்ற கேள்வி  தமிழ் மக்கள்அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வியாகவே இருந்தது. ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதியையும் நேரத்தையும் அறிவித்துள்ளனர் தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சி குழுவினர்.

இந்த சீசனுக்கு அதிகப்படியாக விஜய் டிவியை சேர்ந்த நடிகர், நடிகைகளை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. வருகின்ற 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

அன்று முதல் தினமும் இரவு 9.30மணிக்கு பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Previous articleஅசால்டாக  தமிழ் சினிமாவில் உள்ள  அடல்ட்களை  களமிறக்கிய விஜய் டிவி!
Next articleஎஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!