சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது!

0
159

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது!

உலகில் இந்தியா தான் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.இந்நிலையில் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை செயலர் சுதான்ஷூ பாண்டே கடந்த மே மாதம் கூறுகையில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வரவுள்ளது.

அதனால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.மேலும் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த தடை அமலுக்கு வந்தது.இந்நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டித்துள்ளது.

மேலும் சர்க்கரை விலை நிலையாக இருப்பதற்காக இந்த தடையை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ,சர்க்கரைக்கு பதிலாக சுவையை அதிகபடுத்தி இனிப்பூட்டிகளின் மூலப்பொருளாக உள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் வெள்ளை நிற ஏற்றுமதிகளுக்கு இந்த தடை கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleசந்தானத்தை இயக்குகிறாரா நடிகர் காதல் சுகுமார்… முகநூலில் வெளியிட்ட பதிவு!
Next articleமதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!