ஒரே ஒருவர் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுட்டா’!!! கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளதாக இயக்குநர் பேட்டி!!!

0
126

ஒரே ஒருவர் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுட்டா’!!! கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளதாக இயக்குநர் பேட்டி!!!

கின்னஸ் சாதனைக்காக ஒரே ஒருவர் மட்டும் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா’ திரைப்படத்திற்காக கின்னஸ் சாதனை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான ஜி.சிவா அவர்கள் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா’ ஆகும். இந்த திரைப்படத்தில் இயக்குநர் ஜி. சிவா அவர்கள் மட்டுமே நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஓகி ரெட்டி சிவக்குமார், அருண் சுசில் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மணிசேகரன் செல்வா என்பவர் இசையமைத்துள்ளார்.

இதையடுத்து ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா திரைப்படம் குறித்து இயக்குநரும் நடிகருமான ஜி.சிவா அவர்கள் “ஒரே ஒருவர் மட்டும் நடித்து நிறைய படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுது போக்கு அம்சத்துடன் படத்தின் திரைக்கதையை ஒரே ஒருவரின் கோணத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பி இந்த திரைப்படத்தை எடுத்துள்ளோம்.

ஒரே ஒருவர் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா’ படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 20 நாட்களில் நடத்தி முடித்தோம். இந்த படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. ஒரே ஒரு நடிகர் நடித்து இருந்தாலும் கமெர்சியலாக இருக்க வேண்டும் என்பதால் படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளையும் படமாக்கியுள்ளோம்.

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய முயற்சி ஆகும். ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப விண்ணப்பித்து உள்ளோம். கின்னஸ் சாதனை சார்பாக கேட்ட தகவல்கள் மற்றும் காட்சிகளை நாங்கள் அகொடுத்துள்ளோம்” என்று கூறினார்.