அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

0
98

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் மெட்ரோ ரயில் சேவையை சென்னைக்கு அடுத்து பெரு நகரங்களாக திகழும் கோவை மற்றும் மதுரையில் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணிகளை மெட்ரோ நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது.
இதையடுத்து மூன்றாம் கட்டமாக மக்கள் போக்குவரத்து அதிகம் காணப்படும் நகரங்களான சேலம்,திருச்சி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா? என்று ஆய்வு செய்து அதன் அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 40 கி.மீ தொலைவிற்கும்,திருச்சியில் இரண்டு கட்டங்களாக மொத்தம் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் மெட்ரோ அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ வேண்டுமானால் அமைக்க முடியும் எனவும் ஆய்வு அறிக்கையில் வெளியாகிள்ளது. தமிழக அரசின் பரிசீலனைக்கு பிறகு மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.