ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!!

0
122

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அங்கு இருக்கும் காய்கறி தோட்டங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் நேற்று(ஆகஸ்ட்31) மதியம் வரை வெயில் அடித்த நிலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே ஊட்டி மற்றும் பிற பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது.

ஊட்டியில் நேற்று(ஆகஸ்ட்31) பெய்த கனமழை சூமார் 3 மணிநேரம் நீடித்தது. ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் முழுவதும் வெள்ளம் நிரம்பி ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோத்தகிரி, பாலகொலா, கெத்தை, குந்தா ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள வாய்க்கால்கள் முழுவதிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்தது. தற்பொழுது ஊட்டியில் உள்ள விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.

கோத்தகிரி, குந்தா, ஊட்டி, கெத்தை ஆகிய இடங்களில் வசிக்கும் விவசாயிகள் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு முதலான மலைப் பயிர்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர். இந்த நிலையில் ஊட்டியில் மட்டுமில்லாமல் பிற பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து நிற்கின்றது. விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள், ஊராட்சி ஊழியர்கள் அனைவரும் கால்வியில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.