சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!..       

0
247

சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!..

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள்; பாஸ்மதி அரிசி அல்லது பச்சரிசி – ஒரு கப், சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 4 – 5 பல், தக்காளி – 3 அல்லது 4, காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5, ஏலக்காய் – ஒன்று, கிராம்பு – ஒன்று, உப்பு – சுவைக்கேற்ப, ரீஃபைண்ட் ஆயில் – 2 மேசைக்கரண்டி, நெய் – 2 மேசைக்கரண்டி

 

வாங்க எப்படி செய்வதென்று பார்ப்போம்,செய்முறை ;முதலில் தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியை எடுத்து 20 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்து வைக்கவும்.பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை தோலுரித்து வைக்கவும். தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரியவிட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் ப்ரஷர் பானை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்.விழுது பாதி அளவாகக் குறைந்ததும் அரிசியை சேர்க்கவும்.வதங்கிய விழுதுடன் அரிசி ஒன்றாகச் சேரும்படி கிளறவும்.பிறகு உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் பானை மூடி 3 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து குழையாமல் கிளறிவிடவும். இப்போது சுவையான வெங்காய பிரியாணி தயார்.

Previous articleபப்பாளி அல்வா! ஒரு முறை சுவைத்து பாருங்கள்!
Next articleசெல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here