ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

0
127

ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஜூலை 13-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.இந்த ஆன்லைன் வகுப்பை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Previous article1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!
Next articleகொரோனாத் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் 4T நடைமுறை