மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

0
124
Online classes again? Parents in shock!
Online classes again? Parents in shock!

மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 0 மாணவர்கள் அனைவரும் முககவசம்  கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். தற்போது பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு சில பள்ளிகளில் கட்டுப்பாடுகளை மீறி முககவசம்  அணியாத வகுப்புகளில் எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். அதனால்  மாணவர்களின்  எதிர்காலம் வீணாகிவிடும் எனவும் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டால் மாணவர்கள் அனைவரும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதில் சிரமம் ஏற்படும்.  வேலைவாய்ப்பு பெறுவதற்கும் சிரமம் ஏற்படும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து  பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் எனவும் நேரடி வகுப்பிற்கு சென்று ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நேரில் பார்த்தால் மட்டுமே தெளிவாக புரிகிறது என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது சில பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி நிர்வாகமானது ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வித்திறன்   மற்றும் அவர்களின் உயர்கல்வி போன்றவை கேள்விக்குறியாக உள்ளது எனவும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleபள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த சூப்பர் போட்டி! பரிசு தொகை ரூ.10 ஆயிரம்!
Next articleமாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது!