ஆன்லைன் கேம்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்!! மத்திய அரசு!!

0
87
Online games affect children's future!! Central Govt!!
Online games affect children's future!! Central Govt!!

குழந்தைகளை கவரக்கூடிய ஆன்லைன் கேம்களில் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகள் உருவாக்கப்பட்டன.

இந்த விதிகளின் கீழ், வகைப்படுத்தப்பட்ட சட்டவிரோத தகவல்களை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கையை உள்ளடக்கிய தங்கள் பொறுப்புணர்வை இடைத்தரகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தொடர்புடைய தகவல்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் போன்றவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக , இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் ஏற்படும் குறைபாடுகளை சமாளிப்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியது. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி, குழந்தைகளின் பாதுகாப்பான ஆன்லைன் விளையாட்டு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, எந்த ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் 18 வயதுக்குட்பட்ட எவரையும் சித்தரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவியுள்ளது, இது சட்ட அமலாக்க முகமைகளுக்கு ஒரு கட்டமைப்பையும் சூழல் அமைப்பையும் வழங்குகிறது.

ஒருங்கிணைந்த முறையில் அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் பொதுமக்கள் புகாரளிக்க, தேசிய சைபர் கிரைம் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையப் புகார்களைத் தெரிவிக்கும் வகையில், ‘1930’ என்ற கட்டணமில்லா உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Previous article“பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை செய்துள்ளது” என்பது பொய்யுரை!! பால் முகவர்கள் சங்கம்!!
Next articleGoogle மேப்பின் புதிய அப்டேட்!! தரவுகளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!!