ஆன்லைனில் வரும் பொங்கல் பரிசு! தமிழக அரசு புதிதாக விதித்த கட்டுப்பாடுகள்!
பொங்கல் திருநாள் என்றாலே தமிழ் மக்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடனும் ,பெருமிதத்துடனும் கொண்டாட வேண்டும் என எண்ணி அந்த நாளை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருவார்கள்.
மேலும் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களுக்கே உரிய நாளாக கொண்டாடப்படுகிறது.தமிழ் மக்கள் உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இவை கருதப்படுகிறது.இந்நிலையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவிற்கு மக்களுக்கு பரிசு தொகுப்பு கொடுப்பது வழக்கம்.
அந்தவகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.மேலும் இந்த ஆண்டும் அதுபோலவே வழங்கலாம் என பேச்சு வார்த்தை நடந்த போது பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுஎழுந்தது.
அதில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பொருட்கள் சுகாதாரமற்றதாக இருந்தது எனவும் அதனை மீண்டு தரக்கூடாது என கூறப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது ரூ 1000 ரொக்கம் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி விலையில்லா வேட்டி-சேலைகள் பல வண்ணங்களில் கொடுக்கவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.