முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்! அதிர்ச்சியில் இணையதள வாசிகள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து பின்பு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக பல குடும்பங்கள் பலியாகி இருக்கின்றன. சமீபத்தில் புதுச்சேரியிலும், இணையதள ரம்மி விளையாட்டிற்கு ஒருவர் பலியாகி இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து இளைஞர்களுடைய உயிரைப் பறிக்கும் இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார்கள்.

ஆந்திராவிலும், இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசிற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கடிதம் எழுதி இருக்கின்றார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இணையதள ரம்மி உள்பட அனைத்து இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் முதல்வர் தெரிவித்திருப்பதாவது, இளைஞர்களுடைய நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கி அவர்களுடைய வாழ்க்கையை சீரழிய செய்வதோடு, உயிரையும் பறிக்கும் பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து இணையதள சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்து இருக்கின்றது.

பணத்தை வைத்து விளையாடும் இணையதள சூதாட்டத்தை நடத்துவோரையும், அதில் ஈடுபடுவோரையும், குற்றவாளியாகக் கருதி கைது செய்யும் வகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு எடுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நன்மைகளை தங்கள் செய்வதால் பெருமை அடைகின்றோம்.

எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வரும், இதுபோன்று ஒன்றிணைந்து நின்றால் தமிழகம் நெற்களஞ்சியமாக திகழும், தமிழகத்தை யாராலும் எதுவும் செய்ய இயலாது.

மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும் மக்களின் கரகோசம் உங்களை வந்து சேரும் என்று தெரிவித்து வருகிறார்கள்.