தடையை மீறி தொடங்கிய வேல் யாத்திரை! திருத்தணியில் போலீஸ் குவிப்பு!

0
64

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் வேறு யாத்திரையை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாத காலத்திற்கு நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

இந்த யாத்திரை திருத்தணியில் இன்றைய தினம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

கொரோனா பரவலை காரணமாக வைத்து தமிழக அரசு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் திட்டமிட்டபடியே யாத்திரை நடந்தே தீரும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருக்கின்றது.

திருத்தணியில் இந்த யாத்திரையை தடுக்கும் விதமாக 6 மாவட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து, தமிழக பாஜகவின் தலைவர் எல் .முருகன் திருத்தணிக்கு புறப்பட்டார்
. போகும் வழியில் கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சமயம் அவர் தெரிவிக்கையில், முருகனின் அருளோடு யாத்திரையை திருத்தணியில் தொடங்க இருக்கின்றோம்.

கடவுளுடைய அனுமதி கிடைத்ததால். யாத்திரையை நடத்துகின்றோம் தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுடைய முகத்திரையை கிழிப்பதற்காகவே இந்த யாத்திரை நடத்துகின்றோம்.

கடவுள் முருகனை கருப்பர் கூட்டம் இழிவு செய்தது அந்த கூட்டத்தின் பின்னால் திமுகவும், ஸ்டாலினும், இருக்கிறார்கள் என எல். முருகன் தெரிவித்திருக்கிறார்.