ஆன்லைன் ரம்மி விளையாட்டு: காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்த சம்பவம்!

0
174

ஆன்லைனில் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்த விரக்தியில், தாயின் சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள, திருப்பராய்த்துறை பெரியார் நகரை சேர்ந்தவரான ஆனந்த் 26 வயதான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019 வருடத்திலிருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜியபுரம் வாத்தலை காவல் நிலையத்தில், காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ரேஸ் குழுவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

Online Rummy Games: Police officer commits suicide!
Online Rummy Games: Police officer commits suicide!

இந்தநிலையில் ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாட்டில் சேர்ந்து பணத்தினை பந்தயமாக கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டில் விளையாடுவதற்காக அவ்வப்போது தனது நண்பர்களிடமும் பணம் பெற்று, அதனையும் ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி விளையாடியதாகவும் கூறுகிறார்கள். மேலும் நண்பர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியாததால் நான் உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்தது.

மேலும் தனது வீட்டின் அருகே உள்ள பெண் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் வீட்டிற்கு அருகில் சந்தித்து பேசி வந்தது, இரு வீட்டினருக்கும் தெரியவந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று கூட இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

Online Rummy Games: Police officer commits suicide!
Online Rummy Games: Police officer commits suicide!

இதற்கிடையே ஆன்லைனில் விளையாடி பணத்தை இழந்ததற்காகவும், அனந்த்  தனது காதலியுடனும் சேர முடியவில்லை என கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.  ஆன்லைன் ரம்மி சர்க்கிள் எனும் விளையாட்டில் விளையாடி பணத்தினை அளவுக்கு அதிகமாக இழந்ததால் கடன் தொகையும் அதிகமாகி உள்ளதாகவும் அவருடன் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய அனந்த், இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னாடி உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது தாயின் சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு அவருடைய அப்பா மாட்டு கொட்டகைக்கு சென்றபோது, தனது மகன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியதன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஜீயபுரம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபுதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்
Next articleவங்கிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்