சமீப காலமாக ஆன்லைனில் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரம்மி மோகம் இளைஞர்களை ஆட்கொண்டு அவர்களை ஒரு வழி செய்து வருகிறது.
இளைஞர்களை கவர்வதற்கான இந்த ரம்மி தளங்கள் முதலில் இலவச கிரெடிட் கொடுத்து அவர்கள் ஜெயித்து பணம் வெல்வது போல மாயயை உருவாக்கி விடுகிறது. இதனால் அதற்க்கு அடிமையான பல இளைஞர்கள் தங்கள் பணத்தை இழுந்து நடு ரோட்டில் நிற்க்கும் நிலைக்கு தள்ளப்படும் கதைகளை நாள் தோறும் சமூக வலைதளம் மற்றும் செய்தி மூலமாக கேட்டறிந்த போதும் இளைஞ்சர்கள் திருந்துவதாக இல்லை.
அப்படி வங்கியில் நல்ல வேலையிலிருந்து ரம்மி மோகத்தால் வேலையை இழந்து இன்று குற்றவாளியாக மாறியிருக்கும் ரவி தேஜாவின் கதை தான் இது.
ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நுழிவீடு பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிஒன்றில், முதன்மை காசாளராக பணியாற்றியவர் குந்த்ரா ரவி தேஜா. இவரது நண்பர் இவருக்கு ஆன்லை ரம்மி விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆன்லைன் ரம்மியை துவங்கிய ரவி தேஜா ஒரு கட்டத்தில் அதற்க்கு அடிமையாகி தனது வங்கி கணக்கில் உள்ள தொகையைக் கொண்டு ரம்மி விளையாடி வந்துள்ளார்.
இது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டில் விளையாடுவதை நிறுத்து கொண்டு வேலை நேரத்தின் போது ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், தனது ரொக்க கையிருப்பு கரைந்து போக, வங்கி வாடிக்கையாளர்களின் Fixed Deposit எனப்படும் வைப்புக் கணக்கிலுள்ள பணத்தில் கை வைக்கத் தொடங்கியுள்ளார். இது இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிலிருந்து தனது கணக்கிற்கு பணத்தை மாற்றி ரம்மி விளையாடும் அளவுக்கு அவரை தள்ளியுள்ளது.
தங்கள் சேமிப்பு கணக்கில் தொகையில் மாறுபாடு ஏற்படுவதாக வாடிக்கையாளர்களின் புகாரையடுத்து, ரவியின் உயரதிகாரி ஆய்வை மேற்கொள்ள கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதனையடுத்து வங்கி தரப்பில் ரவியிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தான் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் வரை முறைகேடாக வாடிக்கையாளர் கணக்குளிலிருந்து எடுத்ததை ஒப்புகொண்டுள்ளார்.
இதையடுத்து வங்கி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனயடுது ரவி தேஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.