லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி!

Photo of author

By Rupa

லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி!

Rupa

Only if you give a bribe, the scholarship! Injustice to the people of Periyakulam circle!
லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பகுதியில் பொதுமக்களிடம் லஞ்சம் ( கையூட்டு) எதிர்பார்த்து அரசால் வழங்கப்படும் ஆணை (ம)  சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் ஊனமுற்றோர், விதவை ,கணவனால் கைவிடப்பட்டவர், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை வழங்கி வருகிறது . இது முறையாக சென்று இ சேவை மையத்தில் பதிந்து பின்பு கிராம அலுவலர் அவர்களது கணக்கிற்கு (லாகின் ) சென்றுவிடும். அவர்கள் அதை உடனடியாக மேற்பார்வையிட்டு ஏழு நாட்களுக்குள் விசாரித்து, தகுதியுள்ள பயனாளர்களுக்கு உதவித்தொகை வழங்கிட பரிந்துரை செய்திட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவின் பெயரில்  பெரியகுளம் வட்டத்தில் கிராம அலுவலர்கள் செயல்படுவதில்லை. பொதுமக்களிடம் (கையூட்டு) லஞ்சம் எதிர்பார்த்துக் கொண்டு கிராம அலுவலர்கள் மக்களுக்கு  சென்றடையும் உதவித்தொகைகளை நிறுத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும் , அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணத்திற்கு மிகவும் அவதிபடுகின்றனர் .உதாரணமாக பெரியகுளம் தென்கரை பகுதி அலுவலகங்களை குறிப்பிடலாம். மாவட்ட நிர்வாகம் தகுந்த ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்கும் மேலாக  சான்றிதழ்கள் மற்றும் ஆணைகளை தேக்க நிலையில் வைத்திருக்கும் இது போன்ற அரசு அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.