திருமணம் ஆனவர்கள் உடல் மற்றும் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உறவு நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்கும்.காதல் மட்டும் இன்றி காமமும் உறவை வலுப்படுத்தும் ஒரு ஆயுதமாகவே உள்ளது.தற்பொழுது கணவன் மனைவி இடையே உடல் சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது.
ஆதலால் இருவரும் உடலுறவின் போது முழுமையாக திருப்தி அடைய உடல் மற்றும் மனதை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வேலைப்பளு,மன அழுத்தம்,ஆண்மை குறைபாடு,விந்து முந்துதல்,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற காரணங்களால் ஆண்களால் தங்கள் மனைவியை படுக்கையில் திருப்தி அடைய வைக்க முடிவதில்லை.இதனால் இருவரிடையே மன கசப்பு அதிகரித்து உறவில் விரிசல் உண்டாகிறது.
எனவே ஆண்கள் தங்கள் மனைவியை உடலுறவில் திருப்தி அடைய வைக்க கீழே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் செய்து வரவும்.
1)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
உரலில் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு போட்டு இடித்து சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
1)பசு நெய் – ஒரு தேக்கரண்டி
2)பூசணி விதை – ஒரு கைப்பிடி
மஞ்சள் பூசணி விதையை சேகரித்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
அதன் பிறகு மஞ்சள் பூசணி விதையை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.சோர்வின்றி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள இது உதவும்.
1)கசகசா – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பசு நெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு ஒரு தேக்கரண்டி கசகசாவை அதில் போட்டு கருகிடாமல் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு நெயில் வறுத்த கசகாவை அதில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் ஆண்மை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.