காங்கிரஸ் கட்சிக்கு இந்த இருவரில் ஒருவர் மட்டும் தான் தலைவராக வரவேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

0
127

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகுவதால் அடுத்த தலைவர் யார் என்பதில் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் நாட்டின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியில் மற்ற தலைவர்கள் யாராவது வர வேண்டுமென்றாலும் கூட அவர்களுக்கான பண்பு இருக்கிறது. ஆனால் நேரு குடும்பம் தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு உரியவர்கள் என்று தெரிந்த பிறகு வேறு யாரை நியமிப்பது? சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமே திறமையானவர்கள் தான்.

இதனை குடும்ப ஆட்சி என்று சுருக்கிவிட முடியாது. நேரு குடும்பம் இந்திய தேசிய குடும்பம். சுதந்திரத்திற்கு முன்பே ஆனந்த பவன் என்ற பெரிய வீட்டை நாட்டுக்காக கொடுத்தவர்கள்.

மேலும், மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி என அவரின் குடும்பத்தவர்கள் அனைவருமே சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போதெல்லாம் ஏன் சுதந்திரத்திற்காக ஒரே குடும்பமாக போராடவேண்டும் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லையே?

இப்போது மட்டும் நேரு குடும்பத்தாலும், கோடிக்கணக்கானவர்கள் தியாகத்தாலும் சுதந்திரம் கிடைத்தது. ஆகவே நேரு குடும்பம் தான் எந்த நேரத்திலும் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை!
Next articleமெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய மாநில அரசு:! எப்பொழுதிலிருந்து இயங்குமென்று தெரிந்து கொள்ளுங்கள்!