இவர்கள் இந்த நாட்களில் மட்டும் தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்! எந்தெந்த தினங்கள் தெரியுமா?
கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சிறப்புமிக்க கோவில்களை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூறுவதினால் தொற்று அதிக அளவில் பரவ நேரிடும். அதனால் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இரு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது அலை பரவல் அதிகமாக காணப்பட்டது. அதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தடை விதித்திருந்தனர்.பின்பு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் என்று தளர்வுர்களுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டனர். அதனை அடுத்த சிறப்பு தரிசனம் செய்யும் டிக்கெட்கள் மூலம் மக்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறினர். இலவசமாக தரிசனம் செய்வதற்கு தடை விதித்திருந்தனர்.
நாளடைவில் தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டது. அவ்வாறு இருக்கையில் மக்கள் தற்பொழுது திருப்பதி ஏழுமலையானை தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்யும் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டை வைத்திருக்கவேண்டும் என கூறியுள்ளனர். அந்த நுழைவு சீட்டை சோதனை செய்யும் இடத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார் என கூறியுள்ளனர்.
அதேபோல ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பலர் பிரபலமான முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களை பெற்றுக்கொண்டு ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்களுக்கு வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இனி அவ்வாறு சிபாரிசு செய்த கடிதத்தைப் பெற்று வருபவர்களுக்கு வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. அதனால் சிபாரிசு கடிதம் பெற்றுக் கொண்டு வருபவர்கள் அந்த நாட்களில் வருவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக இதர நாட்களில் வருமாறு கூறியுள்ளனர்.
இவ்வாறு சிறு சிறு தளர்வுகள் அளித்து வந்த நிலையில் தற்போது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனம் செய்ய மீண்டும் அனுமதி அளித்துள்ளனர். அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாரத்தில் திங்கள் முதல் வியாழக்கிழமை நான்கு நாட்கள் வரை சிறப்பு தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இவர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து மீண்டும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் சிறப்பு வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த சிறப்பு தரிசனத்தில் தினந்தோறும் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.