இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

0
195
Only they have this right! A case against the general civil law!
Only they have this right! A case against the general civil law!

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

இந்தியாவில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மதம்,வகுப்பு,பாலினம் என எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை வழங்க அரசமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவு வழிவகுக்கிறது.அதன் மூலமாக திருமணம்,விவாகரத்து தத்தெடுத்தல் பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளை வகுக்க முடியும்.

இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பாக ஆராய, உத்தரகண்ட்,குஜராத் மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டது. அதனை எதிர்த்து அனூப் பரன்வால் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது.அதனை விசாரித்த நீதிபதிகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசுகள் குழுக்களை அமைத்திருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

அரசமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவானது அதுபோன்ற குழுக்களை அமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 7 வது அட்டவணையும் அத்தகைய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கையில் மாநில அரசுகளின் நடவடிக்கையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என எப்படி கூற முடியும்.

இந்த மனுவை விசாரிப்பதற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னதாகவே பல முறை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பொது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!
Next articleஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!