அச்சச்சோ உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே.. து முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுங்கள்!! பாஜக எம்எல்ஏ பரிந்துரை!!

Photo of author

By Rupa

அச்சச்சோ உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே.. து முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுங்கள்!! பாஜக எம்எல்ஏ பரிந்துரை!!
மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து திமுக தனது அரசியல் இலக்கை  அடுத்த கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் உதயநிதியை துணை முதல்வர் பதவியில் அமர்த்துவது. இதற்கு மூத்த அமைச்சர்கள் முதற்கொண்டு வழிமொழிந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் உதயநிதி துணை முதல்வர் அரியணை ஏற தேதி குறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, வாரிசு அரசியல் என்றால் அது திமுக தான் என அப்பட்டமாக நிரூபிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளது. நாளை பதவி இருக்குமா என்று தெரியாத நிர்வாகிகள் கூட இன்று வந்த உதயநிதியை துணை முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று துதி பாடுகின்றனர். இவரை விட அரசியல் அனுபவம் உள்ள பல ஆட்கள் திமுகவில் உள்ளனர். அவர்களில் யாரையாவது துணை முதல்வர் பதவிக்கு அமர்த்தலாம்.
பெண்ணியம் பேசும் ஸ்டாலின் ஏன் தனது தங்கையை அப்பதவியில் அமர்ந்த விரும்பவில்லை என கேள்வி எழுப்பினார். உதயநிதியை காட்டிலும் கனிமொழிக்கு அரசியலில் அதிக அனுபவம் உள்ளது. இந்த ஒரு தகுதி போதாதா துணை முதல்வர் பதவிக்கு?? முதல்வரை போலவே கட்சி நிர்வாகிகளும் தங்களது வாரிசுகளை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்த எம்பி மற்றும் மாவட்ட செயலாளர் என பதவி கொடுத்து வருகின்றனர். இங்கு சீனியருக்கெல்லாம் இடம் கிடையாது வாரிசு அரசியல் தான் இதுதான் திமுக என்று காட்டமாக பேசினார்.