cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் நடுவே இந்திய அணி முக்கிய வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் ஜாம்பவான் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் போட்டியின் நடுவே அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிதான் கடைசி சர்வதேச போட்டி என கூறியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விராட் கோலி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, நான் உங்களுடன் 14 வருடங்கள் விளையாடி இருக்கிறேன், இன்று நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் என்று சொன்னபோது, அது என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் அந்த வருடங்கள் ஒன்றாக விளையாடிய ஃப்ளாஷ்பேக் எனக்கு வந்தது. உங்களுடன் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன், இந்திய கிரிக்கெட்டில் உங்களின் திறமை மற்றும் மேட்ச் வின்னிங் பங்களிப்புகள் எதற்கும் இரண்டாவதாக இல்லை.
நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நினைவுகூரப்படுவீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் அது உங்களுக்காக வெளிப்படும் மற்ற அனைத்தையும் உங்கள் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் எல்லாவற்றிற்கும் நன்றி நண்பரே என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.