இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!
இந்த வருட பொதுத்தேர்வானது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முன்கூட்டியே நடத்தி முடித்து விட்டனர். முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று எந்த ஒரு தகவலையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிடவில்லை.
ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை இந்த வருடம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி சற்று தள்ளி வைக்கப்படும் என்று கூறுகின்றனர். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் அவர்கள், இது குறித்து ஆலோசனை செய்வதாகவும் தகவல்கள் கூறியுள்ளார். அதேபோல விடுமுறை நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
மேற்கொண்டு நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளிவர உள்ளதால் கட்டாயம் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலர் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேற்கொண்டு மற்ற மாவட்டங்களிலும் இந்த தேதியிலேயே பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறி வருகின்றனர். இருப்பினும் தனியார் பள்ளிகள் வெயிலின் தாக்கத்தால் ஒரு வாரம் கூடுதல் விடுமுறை அளித்தே பள்ளிகள் திறப்பதாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளது.