தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல உதவி திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக கை கால் ஊனமுற்றோர்களுக்கு இரு சக்கர வாகனம், வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை உதவித்தொகையும் வழங்குகிறது. இவையனைத்தும் தங்களை பராமரித்து கொண்டு தங்களின் தேவைகளை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ள தமிழக அரசு இந்த நலத்திட்டங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த இலவச பஸ் பாஸ் பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்டம் தோறும் முகாம்கள் நடத்தப்படும். அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்குரிய பாசை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் தற்பொழுது தென் சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இதற்குரிய முகாமானது நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் விவரங்களை கொடுத்து பஸ் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாமானது இம்மாதம் இறுதியில் 20ஆம் தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்றவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.