எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பயங்கர குஷியில் அதிமுகவினர்!

0
168

சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு விருப்பம் முடித்தவர்களுக்கான நேர்காணலின்போது அவர் இவ்வாறு ஒரு பதிலை தெரிவித்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் அவர்களுக்கான நேர்காணல் நடந்தது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு சுமார் 8250 பேர் விருப்ப மனுக்களை கொடுத்து இருந்தார்கள். நேர்காணலை அந்த கட்சியின் ஆட்சிமன்ற குழு நடத்தி இருக்கின்றது. அந்த நேர்காணலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவைத் தலைவரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி போன்றோர் நேர்காணலை நடத்தியிருக்கிறார்கள்.

இதில் தங்களுடைய பெயரில் விருப்ப மனுக்களை கொடுத்து அவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். நேர்காணலுக்கு வந்தவர்கள் கைப்பேசி மற்றும் கைப்பை கொண்டு வரக்கூடாது, முக கவசம் அணிந்து வரவேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தலும் இருந்தது. காலை 9 மணி அளவில் ஆரம்பித்த இந்த நேர்காணல் நள்ளிரவு வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் உரையாற்றிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை எல்லோரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்டு அவருடைய வெற்றிக்காக வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும் பல நபர்கள் விண்ணப்பம் செய்து இருந்தாலும் ஒரு தொகுதிக்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும், கட்சியின் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை மற்ற எல்லோரும் ஆதரவு கொடுத்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்சமயம் வாய்ப்பு வழங்கப்படைத்தவர்களுக்கு தகுதி இல்லை என்று அர்த்தம் கிடையாது. இப்பொழுது வெற்றி பெறுவது மட்டுமே நம்முடைய குறிக்கோளாக இருந்து வருகிறது. அதனை நோக்கியே நாம் பயணம் செய்ய வேண்டும் இந்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படாதவர்கள் சோர்ந்து போக தேவை இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி.

Previous articleமக்களவையில் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் யார் ?ஸ்டாலின் அதிரடி!
Next articleஅதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!