இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்!
2019-ம் ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் கொரோனா தொற்று தொடங்கியது.இந்த தொற்றானது அமெரிக்கா,ரஷ்யா என்று ஆரம்பித்து இந்தியாவிற்கும் வந்தடைந்தது.இந்த தொற்றால் இந்தியாவில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனால் அத்தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஊரடங்கானது 7 மாதங்களை கடந்தது.
அதனையடுத்து கொரோனா தொற்று சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.கோவிட்ஷீல்டு தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்களை போட்டுக்கொள்ளும்படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது மக்கள் தட்டுப்பாடுகளுடன் வெளியே சென்றாலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்ததால் மீண்டும் கொரோன தொற்று பரவ ஆரம்பித்தது.
தற்போது தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவல் அதிகரித்து காணப்படுவதால் நேற்று ஒரே நாளில் சேலத்தில் மட்டும் 547 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இரவு ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலையிலும்,50 சதவீதம் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தடை உள்ளது.ஆனால் அதனை மீறி பின்வாசல் வழியாக மக்களை அனுமதித்த பிரபல துணி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சென்னை,செங்கல்பட்டு,காஞ்சுபிரம் உள்ளிட்ட மாவட்டனகளிலும் கொரோனா தொற்றானது அதிகரித்து காணப்படுகிறது.தற்போது வரை உலகம் முழுவது கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்ககை 15,34 கோடியை தாண்டியுள்ளது.அதே போல உலகம் முழுவதும் தற்போது வரை 15,34,78,525 கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதே போல கொரோனா தொற்று காரணமாக இதுவரை 32,16,128 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தொடருமாயின் கொரோனா பரவும் முக்கிய நகரங்களுக்கு முழு ஊரடங்கு போடப்படும்.