அலுவலக உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு!! இந்தியன் வங்கி அறிவிப்பு!!

0
148

அலுவலக உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு!! இந்தியன் வங்கி அறிவிப்பு!!

இந்தியன் வங்கியில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கு பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதில் வங்கியின் கீழ் இயங்கிவரும் INDSETI நிறுவனத்தில் பணிபுரிவதற்கு காலியாக உள்ள ஆசிரியர் ,அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 6 வரை பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

ஆசிரியர் – Graduate Degree, Post Graduate Degree (MSW / MA / B.Sc / BA / B.Ed)

அலுவலக உதவியாளர்– Graduate Degree (BSW / BA / B.Com)

உதவியாளர் – 10ம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்கள் ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

ஊதியம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டமாக தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

1.Written Test

2.Personal Interview

3.Demonstration / Presentation

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 06.08.2023 கடைசி தேதிக்குள் அதில் சொல்லப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Previous articleலைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! தமிழக அரசின் புதிய சேவை!!
Next articleபிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!