“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனிடையே வரும் இடைத்தேர்தல் மக்களவை தேர்தல் என எதிலும் இவர் போட்டியிடவில்லை.தற்போதிலிருந்தே இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெரும்பான்மையாக உள்ளது.அந்த வகையில் இவரது கூட்டணி கிடைத்துவிட்டால் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் வாக்கு சதவீதத்தில் முன்னேறி வெற்றி கண்டுவிடும்.
அந்த காரணத்தினால் பாஜக முதல் அதிமுக வரை அனைத்து கட்சிகளும் இவரின் கூட்டணியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.சமீப காலமாக நாம் தமிழர் கட்சி சீமானுடன் இவரை கூட்டணியில் வைத்து பேசி வந்தார்கள்.இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சீமான், நாம் தமிழர் கட்சியானது மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி அறிக்கை வெளியிட்டார்.அதில் பலரின் பெயர்களை தனித்துவமாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால்,தன்னை வாழ்த்திய விஜய்யை மட்டும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
இதை வைத்து இவர்களது கூட்டணி முறிந்து விட்டது என பலரும் பேசினர்.பலருக்கும் வாழ்த்துக்களை மட்டும் கூறி வந்த விஜய் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முதன் முறையாக திமுகவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார்.இதிலிருந்தே தனது அரசியலில் திமுகவை எதிர்ப்பது தான் நோக்கம் என்பது அப்பட்டமாக தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து இவர் நாம் தமிழர் அதிமுக என யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அந்த வகையில் தனது பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவித்த அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த விஜய் அதில் திமுகவை மட்டும் குறிப்பிடவில்லை.அதேபோல திமுகவும் நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.விஜய் அவர்கள் திமுகவை முழுமூச்சாக எதிர்க்கிறார் என்பதை இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.மேலும் இவர் அதிமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாகவும் மாஜி அமைச்சர்கள் இது குறித்து இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.