இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

Photo of author

By Vijay

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

Vijay

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்குகிறார். அதில் குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து புகார் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்த நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.