மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!

Photo of author

By Jeevitha

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!

ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் தொடங்கிய மாநிலங்களவை மணிப்பூர் விகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச தொடங்கிய போது அவரது மைக்கை அணைத்த ஆளுங்கட்சி எதிர்ப்பை தெரிவித்தது. அதனை  தொடர்ந்து மசோதாக்கள் மீது விவாதத்தை தொடங்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்து உள்ளது. இந்த நிலையில் மக்களவை அலுவல்படி கேள்வி நேரம் வழக்கம் போல் செயல் படும் என்று சபாநாயர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் நம்பிக்கையில்லாத் தீர்வனம் குறித்து சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து 5 வது நாளாக எதிர்க்கட்சிகள் பிரதமரை பேச கூறி அதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டது. அதனையடுத்து மணிப்பூர் விவகாரம் குறித்து 11 மணி முதல் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.