கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?

0
129

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?

மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அலுவல்களில் கருப்பு உடையில் பங்கேற்க்க முடிவு.

புதுடெல்லி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது.
இந்நிலையில்,கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு விவகாரங்களை முன்னெடுத்து எதிர்கட்சிகள் தொடர் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,ஜூலை 27 ஆன இன்று மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் ‘குகி’ இன பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய விவாதத்திற்கு அனுமதிக்காது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காதது,பிரதமர் மோடி இது பற்றி பேசாதது போன்ற பிரச்சனைகளை முன்னெடுத்து எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

இது,தொடர்பாக ‘இந்திய’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள்,தங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரின் அறையில் நேற்று காலையில் நடந்த கூட்டத்தில் ‘கருப்பு உடை’அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

Previous articleவிபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…!
Next articleதன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!