பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்! 

Photo of author

By Rupa

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்!

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக  கர்நாடகா மற்றும் தமிழகம் வந்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவும் இருக்கிறார். முன்பே ஒரு முறை தமிழகம் வந்த பொழுது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரதமரை சந்தித்தனர்.

அவர் தமிழகத்திற்கு வரும் பொழுது எடப்பாடி பழனிசாமியும் அதுவே தமிழகத்தில் இருந்து புறப்படும் பொழுது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தனர். தற்பொழுது மீண்டும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வரும் பிரதமரை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்திக்க உள்ளனர்.

தற்பொழுது அதிமுகவில் ஒற்றைக் கட்சி தலைமை விவகாரம் நடந்து வரும் வேளையில் பிரதமரை தனித்தனியாக இருவரும் சந்திக்க உள்ளனர். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் மோடியை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். அதனையடுத்து இவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள உள்ளார்.அதுமட்டுமின்றி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டமும் வழங்க உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பிரதமரிடம் இருவரும் தனித்தனியாக பேச வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.