மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி!! தேர்தலை எதிர்கொள்ள புதிய சூழ்ச்சி!!

0
267

மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி!! தேர்தலை எதிர்கொள்ள புதிய சூழ்ச்சி!!

ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு பலரும் இடம் இடம் பெயர்ந்து தொழில் ரீதியாகவோ அல்லது இதர காரணங்களினாலும் வாழ்ந்து வரும் பட்சத்தில் அவர்களால் சொந்த ஊருக்கு சென்ற வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது தங்களது வாக்கை செலுத்த முடியவில்லை.

இதனை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் ஆனது ரிமோட் வாக்குப்பதிவு என்ற செயல்முறையை கொண்டு வர உள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு மூலம் எந்த இடத்தில் இருந்து கொண்டும் தங்களது வாக்குகளை செலுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து ஆலோசனை கூட்டம் போனது இன்று டெல்லியில் நடைபெற உள்ளதால் இதில் எட்டு தேசிய கட்சிகளும் 57 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்களிடம் ரிமோட் வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த கூட்டம் முடிவடைந்ததும் அந்தந்த கட்சியை சார்ந்தவர்கள் தங்களது கருத்தினை இம்மாதம் முடிவதற்குள் அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் சார்பாக தம்பிதுரை சந்திரசேகர் ஆகியோரும் ஓபிஎஸ் சார்பாக சுப்புரத்தினம் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு ஒரே கட்சியை சேர்ந்த இருவரும் ஒரே ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிணைந்த கலந்து கொள்ள இருப்பதால் மீண்டும் அதிமுக இணையுமா என்று பேசப்பட்டு வருகிறது.

Previous articleமின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்!
Next articleநாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!