எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கூட்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவராக யார் அமரப் போகிறார்? மேலும் அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.
இதில் பின்னணியில் இருக்கும் உண்மையை தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இபிஎஸ் ஓ பன்னீர்செல்வத்தின் இடத்திற்கு ஆர்.பி உதயகுமார் என கூறிய நிலையில்,அவர் அமர நேருமா என்ற பல கோணங்களில் கேள்விகள் எழுந்துள்ளது.அதிமுக இரு அணிகளாக பிரிந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு பல கடிதங்களை எழுதியுள்ளனர். எதிர்கட்சி துணைதலைவராக யார் அமரப் போகிறார் என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.
ஓ பன்னீர்செல்வத்தின் இடத்திற்கு உதயகுமாரை அமர வைக்க முடியாவிடும் பட்சத்தில் பழனிசாமி அணி ச கூட்டத்தொடரை புறக்கணிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பழனிச்சாமி வைத்த கோரிக்கையான, ஓ பன்னீர்செல்வத்திற்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆரவாரம் செய்தால் அவைக்கும் உண்டான மரியாதை குறையும். இவ்வாறு நடக்க ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
உங்களுக்கான எதிர்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக கேள்வி நேரம் வரும் பொழுது அதற்கான பதில் அளிப்பேன் என்று தெரிவித்தார்.அதுமட்டுமின்றி கூட்டுத்தொடர் நடக்கக்கூடாது ஏதேனும் கலகம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு தான் வந்துள்ளீர்கள் என்று அப்பாவு கூறினார். இவ்வாறு அதிமுக எம்எல்ஏக்கள் ஆரவாரம் செய்த பொழுது இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு துரைமுருகன் கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி தற்பொழுது ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் முக்கிய புள்ளிகள் மாட்டக்கூடும்.
அதனால் கூட்டத் தொடரை கலைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறினார். மேலும் இபிஎஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவு இருக்கைக்கு அருகே தர்ணா போராட்டத்தை தொடங்கினர். அவையில் இதுபோல ஆரவாரத்தை தடுக்க உடனடியாக அந்த எம்எல்ஏக்களை வெளியேற்ற அப்பாவு உத்தரவிட்டார். கூட்டுத்தொடர் அவை காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை வெளியேற்றினர். மேலும் வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்களின் பேச்சுக்கள் அவையில் இடம்பெறாது என்றும் அப்பாவு தெரிவித்தார்.