அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Rupa

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சற்று பரபரப்பாகவே தான் உள்ளது. ஏனென்றால் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்ட பொழுது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி தான் இந்த பரபரப்பிற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அமர நியமித்தார்.

மேலும் சட்டப்பேரவை கூட்டுத் தொடரில் அவர்தான் அமர வேண்டும் என்று கூறி சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். சபாநாயகரோ நீதிமன்றத்தின் முடிவுக்கேற்ப செயல்படுவதாக தெரிவித்தார். முன்தினம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்திற்கு ஓபிஎஸ் அவர்களை அமர வைத்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அச்சமயமே சட்டப்பேரவை கூட்டத் தொடரை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்தார்.

மேலும் நேற்று இது குறித்து வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் செய்தார். அனுமதி இன்றி போராட்டம் செய்ததால் போலீசார் இவரை கைது செய்தனர். மேலும் எடப்பாடி அவர்கள், ஸ்டாலின் உத்தரவின்படி சபாநாயகர் செயல்பட்டார். அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் துணை தலைவர் பதவியில் அமர்த்தபட்டார் எனக் கூறினார். அதுமட்டுமின்றி இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஸ்டாலின் அரைமணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டதாகவும் என்பதையும் கூறினார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை ஓ பன்னீர்செல்வம் சந்திக்கையில், எடப்பாடி, நான் மற்றும் ஸ்டாலின் பேசிக்கொண்டதாக கூறியுள்ளார். அதனை அவர் நிரூபித்தால் நான் உடனடியாக கட்சியை விட்டு விலகுகிறேன். அப்படி நிரூபிக்காவிடில் அவர் கட்சியை விட்டு விலகுவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி நேற்று நடந்த போராட்டம் எனக்கு எதிரானது அல்ல என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார்.