திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்!
தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வே இல்லாமல் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தமிழகம் முழுவதும் அவர் செய்த சூறாவளி பயணத்தின் காரணமாக சுகாதாரப்பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதே வேளையில் நோய் தொற்றும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் பிரச்சாரத்தை மட்டும்தான் மேற்கொண்டார். ஆனால் வேறு எந்த உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில்தான் சமீபகாலமாக இந்த நோய் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் வீட்டில் இருந்தவாறே கட்சிப் பணிகளையும் தேர்தல் தொடர்பான விவகாரங்களையும் தொலைபேசியின் மூலமாகவே கவனித்து வந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் சட்டசபைக்கு சென்ற அவர் நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அறிவித்தார்.
இதற்கு மத்தியில் கடந்த 19ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் குடலிறக்க நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி ஆகி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஒருநாள் மட்டும் அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னையில் இருக்கின்ற அவருடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இப்படியான சூழ்நிலைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரணை செய்து இருக்கிறார். அந்த சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் இப்படி ஒரு நிலை வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் விரைவில் நலம் பெறும் என்று முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார். அவருடன் ஒரு சில கட்சி நிர்வாகிகளும் சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.