அடுத்த ஆட்சி இவருடையதுதான்! சொல்கிறார் முக்கியப்புள்ளி!

0
73

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எனப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை. ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் இருக்கின்ற குமாரசாமி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கின்ற வாக்கு இயந்திரங்கள் அங்கே இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு கன்டெய்னர் லாரி வந்து செல்வதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது தோல்வியின் பயத்தில்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக இந்த முறை வெற்றி பெறப்போவதில்லை என்று கருத்துக் கணிப்பு தெரிவித்தது. ஆனால் அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதே போல இம்முறையும் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும். அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்..