இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்!

0
208
OPS support for EPS candidate? AIADMK President's Exciting Letter!
OPS support for EPS candidate? AIADMK President's Exciting Letter!

இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை, பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியிருந்தார். இதனையடுத்து 2,675 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இன்று மாலை 7 மணிக்குள் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளரான தென்னரசை ஏற்க சம்மதமா அல்லது எதிர்க்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பிற்கு தமிழ்மகன் உசேன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleஇடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!
Next articleதங்கம் விலை மீண்டும் உயர்வு! இனி கடைக்கு போக வாய்ப்பில்லை என புலம்பும் இல்லத்தரசிகள்!