எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!
அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது.
ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதனை ஒருபோதும் ஒத்துக் கொள்ள முடியாது எனக் கூறி ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் இந்த பொதுக்குழு செல்லாது என்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் முடிவுகள் தற்போது வரை வெளிவரவில்லை. விநாயகர் சதுர்த்தி முடிவதற்குள் வழக்கின் முடிவுகள் வெளிவந்துவிடும் என்று அரசியல் கட்சிகள் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள், ஓபிஎஸ் இபிஎஸ்க்கு எதிராக செயல்படுவதில் திட்டம் தீட்டி வருவதாக அவரது சுற்று வட்டாரங்கள் கூறுகிறது.அதன் முதல் படியாக எடப்பாடி நிற்கும் சேலத்திலேயே அவர் கை வைப்பதாக தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் சிலர் கலந்து கொண்டனர்.
அந்த ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் எடப்பாடி மீது அதிருப்தி கொண்ட நிர்வாகிகளை தங்கள் பக்கம் வரவழைக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பானது நமது பக்கம் தான் வரும். எடப்பாடி மீது சகிப்புத்தன்மையில் இருக்கும் நிர்வாகிகளை நமது பக்கம் இச்சமயத்தில் இழுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
சேலம் மாவட்டத்தின் புறநகர் செயலாளர் ஆக தற்பொழுது இளங்கோவன் உள்ளார். அவரை நியமிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் வந்தது. அவ்வாறு எரித்தவர்களை தங்கள் பக்கம் இச் சமயத்தில் இழுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளாராம். அவ்வாறு வருபவர்களுக்கு நான் வெற்றி பெறும் பொழுது நல்ல பதவியை அளிப்பேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு பார்க்கையில் சேலத்தில் உள்ள எடப்பாடி நிர்வாகிகளில் பலர் ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.