கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர்
கொரோனா இரண்டாவது அலையானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து கொரோனா மூன்றாம் அலையும் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதேநேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசின் வழிகாட்டுதலின் படி மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தான் கொரோனாவிற்கு வாய்வழி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐ சி .எம் .ஆர். ஈடுபட்டுள்ளது.
ஐ .சி. எம் .ஆர் எனப்படும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் தற்பொழுது, கொரோனாவை கட்டுப்படுத்த வாய்வழி மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சாந்தா தத்தா இது குறித்து கூறியதாவது.
இந்த ஆராய்ச்சி ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குவதாக கூறியுள்ளார். இதற்கான நிதியை ஒதுக்கியவுடன் உடன் ஆராய்ச்சியை தொடங்கி விடுவோம் என்று கூறியுள்ளார்.இதற்கு முன்னரே இந்தியா போலியோ எனும் கொடிய நோயை, வாய்வழி மருந்து மூலம் இந்தியாவிலிருந்து முற்றிலும் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆராய்ச்சியும் வெற்றி பெறும் என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.ஒவ்வொரு நாடுகளும் கொரோனாவை எதிர்கொள்ள தங்களுக்கென தனி தடுப்பூசிகளை தயாரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.